Wednesday, 6 June 2012

VINOTH ARAKATTALAI in 'KAARUYA HOME FOR MENTALLY CHALLENGED PEOPLE'


ஏராளமான பாராட்டுகள், எக்கச்சக்கமான வாழ்த்துக்கள், ஆயிரம் ஆயிரம் விமர்சனங்கள்.......எல்லோருக்கும் நாங்கள் ஏதோ பெரிதாய் புதிதாய் செய்வது போல ஒரு வியப்பு....
உண்மை அது அல்ல... என் உயிர் நண்பன் என்னவெல்லாம் செய்ய நினைத்தானோ அவற்றை எல்லாம் செய்ய முயற்சித்து கொண்டுதான்  இருக்கிறோம் .எங்களால்  அவன் அளவு யோசித்து உதவ முடியாவிட்டாலும் கூட அவன் யோசித்ததை நிறைவேற்றி வைக்க முயற்சி எடுக்க முடியும்.

அந்த முயற்சியின் விளைவு தான் இந்த வினோத் அறகட்டளை.நேற்று இந்த அறக்ட்டளையின்  மூலம் அவன் மிகவும் ஆசை பட்ட 'காருண்யா இல்லம்' என்ற மாற்று திறநாளிகள் வசிக்கும்  இடத்திற்கு நானும் என் நண்பர்களும் சென்றோம்.

KAARUNYAA ILLAM...



அவர்களுக்கு என்னென்ன தேவை என்பதை அறிந்து, அவர்களின் அன்றாட தேவைகளான பற்பசை (tooth paste), சோப்பு மற்றும் மளிகை சாமான்கள் சுமார் 80 நபர்களுக்கு நன்கொடையாய் கொடுத்தோம்.

அங்கே இருக்கும் மனநலம் குன்றியவர்களையும், மாற்று திறனாளிகளையும் பார்க்கும் போது தான் தெரிகிறது  என் நன்பானின் மனதை பற்றி. என் தோழனை நினைத்து ஒவ்வொரு நிமிடமும் பெருமையாய்  இருக்கிறது. அவனால்..... அவனுக்காக நாங்கள் நேற்று புண்ணியம் தேடி கொண்டோம்.

நாங்கள் மாறு தட்டி வினோத் எங்கள் உயிர் நண்பன் என்று  சொல்வதற்கு இதை விட வேறு என்ன தகுதி வேண்டும்... நண்பா கடைசி மூச்சு உள்ள வரை எங்கள் சுவாசத்தில் நீ கலந்திருப்பாய் .. :(:(:(
                            LOVE YOU FOREVER VINOTH

1 comment:

  1. happy to read this , Vinoth must be smiling from heaven.

    ReplyDelete