நேற்று என் பிறந்த நாள்.... போன வருஷம் எப்படி night 12 மணிக்கு அழுதேனோ அதே மாதிரி முடிஞ்ச அளவு சத்தமா அழுது என் பிறந்த நாளை கொண்டாடுனேன்.
என் நண்பன் வினோத் இல்லையேனு நினச்சாலே இந்த மாதிரி விசேஷங்கள் எல்லாம் கண்ணீரால தான் நல்லா அலங்கரிக்க முடியுது.
"வினோத் அறகட்டளை" னு ஒரே ஒரு விஷயம் தான் எனக்கு ஆறுதலா இருந்துச்சு. என் நண்பர்கள் சாரதி,கெளதம்,லக்ஷ்மி பிரபா,ஷங்கர்,வினோத்,ஜோன்ஸ் பிரவீன் மற்றும் தமிழ் அரசு எல்லாரும் "ஏலிம் மனநலம் குன்றியோர் பயிற்சி பள்ளி" க்கு போனோம். அங்க சின்ன சின்ன குழந்தைங்க நிறையா பேர் என்னை சுத்தி நின்னுகிட்டு எனக்கு "ஹாப்பி பர்த்டே அண்ணா, ஹாப்பி பர்த்டே அண்ணா" னு கை குடுத்து வாழ்த்துக்கள் சொன்னாங்க.அவங்க முகம் எல்லாம் சந்தோஷம்.....

நம்ம அறகட்டளை மூலமா பத்துக்கும் மேற்பட்ட நல்ல உள்ளங்களின் பங்கீடுனாளையும்,வினோத்தின் கிருபைனாளையும் அங்க இருக்க குழந்தைகளுக்கு கவனிக்கும் திறனை அதிக படுத்துற மாதிரி சில சாதனங்களையும், நடக்க கட்ருக்கொள்ளும் குழந்தைகளுக்காக வாக்கர் (walker) உம் நன்கொடையாக கொடுத்தோம்.
"அண்ணா குடுத்தான் அண்ணா குடுத்தான்"ன்னு அந்த குழந்தைங்கள் ஒரே சத்தம் ...
மனநலம் பாதிக்க பட்ட அந்த குழந்தைங்க கிட்ட "இது வினோத் அண்ணா சொர்கத்துல இருந்து அவன் நண்பர்கள் எல்லார் மூலமாவும் என் பிறந்த நாள் அப்போ உங்களுக்கு குடுதுருகான் குட்டி"ன்னு எப்படி புரிய வைக்கறதுன்னு தெரியாம ரொம்ப கஷ்ட்டபட்டேன்.
இந்த நற்செயலுக்கு உறுதுணையாய் இருந்த என் நண்பர்கள் அனைவருக்கும் என் நன்றி.
நம் அறகட்டலைக்கு நன்கொடை தற்போது போதுமான அளவு சேர்ந்து இருக்கிறது.இதை வைத்து நம் அறக்ட்டலையை அரசு அங்கீகாரம் பெற்றதாக விரைவில் மாற்றி விடலாம் என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறோம்.
இப்படிக்கு,
பழனியப்பன் மெ .
(Member of Vinoth Arakattalai)

No comments:
Post a Comment