Tuesday, 17 December 2013

வினோத் அறகட்டளை ஆர்வலர்களை ஒன்று சேர்க்கும் பணி

சில நாட்கள் முன்பு என் நண்பர்கள் சிலரிடம் வினோத் அறகட்டளையின் அடுத்த கட்ட நடவடிக்கைகளை பற்றி சில யோசனைகளை பகிர்ந்து கொள்ள நேர்ந்தது....

பலதரப்பட்ட கருத்துக்களும் பல்வேறு யோசனைகளும் நம் அறகட்டளையை அடுத்த நிலைக்கு கொண்டுசெல்லும் நோக்கத்தில் வலியுருதபட்டது.அவை அனைத்தையும் ஆய்வு செய்து தற்போது ஒரு முடிவுக்கும் வந்துள்ளோம்.

பலர் நம் அறகட்டளை பணிகளை நம்முடன் சேர்ந்து செய்ய மிகவும் ஆசைபடுகிறார்கள்.ஆனால் துரதிர்ஷ்ட வசமாக அனைவரையும் தொடர்பு கொண்டு பங்கேற்க வைக்க முடியவில்லை.ஆகவே சமூக தொண்டார்வம் கொண்டவர்களை இனி நம் அறகட்டளை மூலமாக ஒன்று சேர்க்கும் ஆயத்தம் உள்ளது.ஒரு சீரான ஆர்வலர்கள் வலயம் பெற, முதற்கட்டமாக அவ்வப்போது VISUALLY CHALLENGED CHILDREN SCHOOL,SEVVAIPETTAI-க்கு சென்று அங்குள்ள குழந்தைகளுக்கு READING SESSIONS நடத்தலாம் என்று எண்ணுகிறோம். ஞாயிற்று கிழமைகளில் ஒரு சில மணி நேரம் ஒதுக்கினால் போதும். ஆர்வலர்கள் ஒன்றுகூடவும் வழிவகுத்து நல்லகாரியமும் நிறைவேறும் வண்ணம் நண்பர்கள் இதை ஆதரிக்குமாறு கேட்டுகொள்கிறோம்.

இதை சில கல்லூரிகளில் சென்று மாணவர்களையும் ஒன்று சேர்க்கலாம் என்று நினைத்துள்ளோம். 

No comments:

Post a Comment