Thursday, 8 May 2014

வினோத்தின் நினைவு நாள் அன்று செய்த நல்ல காரியம்

மே 8, வினோத் நம்மை விட்டு பிரிந்த நாள். இந்த உலகம் வேண்டாம் என்று அவன் முடிவு செய்த நாள்.அவன் நம்மை விட்டு பிரிந்தாலும் நம்முள் இன்னும் உயிராய் வாழ்வது உண்மை. அவனை இன்னும் பலர் மனதில் விதைத்து அவனை நிரந்தரமாக வாழ வைப்பது தான் நம் அறக்ட்டலையின் நோக்கம். அதை நிறைவு செய்யும் வகையில் அவன் நினைவு நாளான நேற்று சக்தி பிரகாஷ் என்ற  சிறுவனை இந்த ஆண்டு மூன்றாம் வகுப்பு படிக்க வைக்கும் முழு பொறுப்பையும் ஏற்றுகொண்டோம்.அந்த சிறுவனின் சகோதரிகள் மூவரும் அரசு பள்ளியில் இலவசமாய் படிகிறார்கள்.கடைகுட்டியான இந்த சிறுவனை மட்மாவது கொஞ்சம் செலவு செய்து படித்து வைத்துவிட வேண்டும் என்று மிகவும் முயற்சி செய்கிறார்கள்.நம் அறகட்டளை அவர்கள் கனவை நிறைவேற்ற ஒப்புக்கொண்ட பின் அவர்கள் கண்ணீருடன் சொன்னது ஒரு வார்த்தை தான் "உங்கள் நண்பன் சாகவில்லை, கடவுளாய் எங்கள் வீட்டில் இருக்கிறார் "என்று. இது போதும் எங்களுக்கு.அவன் சாகவில்லை. ;( ;(

1 comment: