Monday, 11 March 2013

வினோத்தின் பிறந்த நாள் பரிசாக சுமார் 200 பேர் உடல் உறுப்பு தானம் செய்ய பதிவு செய்தனர்

நாம் கடந்த பதிவில் சொல்லியது போல நம் நண்பன் வினோத்தின் பிறந்த நாள் (Apr 02) முன்னிட்டு நம் நண்பர்கள் சிலர் உடல் உறுப்புகளை இறந்த பின் தானமாக தர பதிவு செய்யலாம் என முடிவு செய்தோம்.அந்த பனி சம்மந்தமாக நம் அறகட்டளை பல இடங்களில் விசாரித்ததில் ஒன்று மட்டும் தெளிவாக புலப்பட்டது.உடல் உறுப்பு தானம் பற்றிய விழிப்புணர்வு ஏறத்தாழ யாரிடமும் இல்லை என்றே சொல்லும் அளவு இருந்தது.வினோத்தின் நண்பர்கள் மட்டும் இத்தானத்தை செய்து அவன் பிறந்த நாள் பரிசை எளிமையாக்க நாங்கள் விரும்பவில்லை.அதனால், சேலம் ஜெயராம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில்,இன்று (11.03.2013) வினோத் அறகட்டளை மூலமாக உடல் உறுப்பு தானத்தை பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்த பெற்றது.திரு.Isaac, MOHAN FOUNDATION, CHENNAI( www.mohanfoundation.org ),இந்த விழிபுணர்வு ஊட்டும் சொற்பொழிவை நடத்தி கொடுத்தார்.எங்கள் ஆச்சர்யத்திற்கு அளவே இல்லை.குழுமி இருந்த மாணவ மாணவியர்களில் சுமார் 90% இந்த புனிதமான தானத்தை செய்ய விருப்பம் தெரிவித்தனர். ஆம்!!!!! 185-க்கும் மேற்பட்டோர் இந்த தானத்திற்கு சம்மதம் தெரிவித்து பதிவு செய்தனர். அவர்களுக்கு மிக விரைவில் "டோனர் அட்டை"(DONOR CARD) வழங்கப்படும்.



திரு.ஐசாக்... விழிப்புணர்வு சொற்பொழிவு 










மாணவர்கள் தானத்திற்கு விருப்பம் தெரிவித்து பதிவு செய்தல்.



குழுமி இருந்த மாணவ மாணவியர்.



கல்லூரி முதல்வருடன் "வினோத் அறகட்டளை"









நண்பா வினோத்!!!!! இதோ உன் பிறந்த நாள் பரிசு.ஏதோ எங்களால் முடிந்தது.......

No comments:

Post a Comment