Wednesday, 12 June 2013

ஒரு குழந்தையின் படிப்பிற்கு உதவி செய்யுங்கள்.

திரு.மனோகரன்,கும்பகோணத்தில் ஒரு ஜவுளி கடையில் சேல்ஸ் மேனாக வேலை பார்த்து வருகிறார்.அவருக்கு மாத வருமானம் ரூ.4500.அவர் குடும்பமே இந்த குறைந்த சம்பாத்தியத்தில் தான் நடக்கிறது.அவருக்கு இரண்டு பிள்ளைகள்.எப்பாடு பட்டாவது தம் பிள்ளைகளை படிக்க வைத்து விட வேண்டும் என்ற வைராக்கியதோடு உள்ளவர்.வருடாவருடம் என் பாட்டி வீட்டிற்க்கு வந்து அவர் உதவி கேட்பதை நான் பார்த்திருக்கிறேன்.இந்த வருடமும் வந்தார்.அச்சமயம் நானும் என் விடுமுறை நாட்களை கழிக்க கும்பகோணம் சென்று இருந்தேன்.அவர் மகள் தற்போது எட்டாம் வகுப்பில் இருந்து ஒன்பதாம் வகுபிற்க்கு செல்கிறார்.கும்பகோணம் சரஸ்வதி பாட சாலையில் பயில்கிறாள்.வருடத்திற்கு மொத்தம் ரூ.5500 ஆகும் அவர் மகள் படிக்க.நம் அறகட்டளை மூலம் அவர் மகள் படிப்பிற்கு உதவி செய்வதாக கூறி உள்ளேன்.நண்பர்களே நீங்கள் இருக்கும் தைரியத்தில் தான் வாக்கு கொடுத்திருக்கிறேன். நம் நண்பர்கள் அனைவரும் சில நூறுகளாக சேர்த்தாலும் அவர் மகளை படிக்க வைத்து விடலாம்.உதவி செய்ய விருப்பம் உள்ளவர்கள் 9488817257 ஒரு call செய்யுங்கள். அல்லது என் வங்கி கணக்கு விவரங்களையும் பதிவு செய்கிறேன்.முடிந்த மட்டும் உதவி கரங்களை நீட்டி ஒரு குழந்தையை படிக்க வைக்கலாம்.உங்களின் பொற்பாதங்களில் பணிந்து கேட்கிறோம்.நம் வினோத் அறக்ட்டலையின் மூலம் அந்த பெண்ணை படிக்க வைக்கலாம்.
வினோத் அவர்கள் குடும்பத்தில் வெளிச்சம் வீசுவான்.


No comments:

Post a Comment